Ajith
Ajith

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த அஜித் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,அஜித்,ஐஸ்வர்யா ராய்,தபு,அப்பாஸ் போன்ற பலரது நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தினை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத் தழுவல் நாவலான சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ajith

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ‘சிவாஜி கணேசனுக்குப் பிறகு பாடலுக்கான உதட்டு அசைவு அஜித்துக்கு அற்புதமாகப் பொருந்துகிறது’ எனச் சொல்ல, எதிர்பாராத அந்தப் புகழ்ச்சிக்குத் திக்கென அதிர்ந்து, பின் எழுந்துநின்று அந்தப் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.

தல அஜித்தின் இன்றைய மார்க்கெட் எந்த லெவலில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் வந்த காலக்கட்டத்தில் அவருக்கு அந்த அளவுக்கு

அதிகம் படித்தவை:  அஜித் ஜி மக்கள் இன்னும் உங்களை ஹீரோவாக ஒப்புக் கொள்கிறார்களா,கமால் கான் டிவீட்.
Ajith
Ajith

மார்க்கெட் இல்லை.

வளரும் நடிகராகத்தான் இருந்தார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்தோடு உலக அழகி ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, தபு, அப்பாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாகத்தான் ஐஸ்வர்யா ராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக எல்லாம் நடிக்க முடியாது என மறுத்தார்.

ajith

மம்முட்டி அல்லது அப்பாசுக்கு ஜோடியாக வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இதனால் கதையில் சிறு மாற்றங்கள் செய்து ஐஸ்வர்யா ராயை மம்முட்டி ஜோடியாக மாற்றினார்கள்.
அதே போல படப்பிடிப்பு தளத்திலும் அஜித்தை யாரும் மதிக்கவே இல்லை. மிக கேவலமாக நடத்தப்பட்டார்.

அதிகம் படித்தவை:  ரசிகர்களுக்கு அஜித் தரும் டபுள் விருந்து !

இதை பார்த்த மம்முட்டி இயக்குனரான ராஜிவ் மேனனை கடிந்து கொண்டாராம். ஒரு வளரும் நடிகரை இப்படி எல்லாம் நடத்த கூடாது என்றெல்லாம் கூறினாராம்.பின்னர் கதையில் அஜித்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது.

ajith

மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி மற்றும் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைப்பதா அல்லது அஜித், தபுவை சேர்த்து வைப்பதாக என்ற குழப்பம் ஏற்பட்டது.

இறுதியில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் ஜோடியை சேர்த்து வைத்து படத்தை முடித்தார்கள். படம் வெளிவந்த பெரிய வெற்றியை பெற்றாலும், கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவும் சரி இப்பவும் சரி எப்பொழுதும் ஒரே மாதிரியா இருபது என்னமோ நம்ம  தல தான்