பல வருடங்களாக தவமிருந்த ரோஜா.. தக்க சமயத்தில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

அரசியல் நுழைவிற்கு சினிமா முக்கிய பங்குவகிக்கிறது. ஏனென்றால் சினிமாதான் ரசிகர்களை மிகவும் நெருக்கமாக வைத்திருக்கிறது. சிலர் அரசியல் வருவதற்காகவே சினிமாவை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் சிலர் சினிமாவில் கிடைத்த பிரபலம் மூலம் அரசியலிலும் நுழைகிறார்கள்.

அவ்வாறு எம்ஜிஆர், ஜெயலலிதா என பல அரசியல் ஆளுமைகள் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். தற்போது குஷ்பு, ரோஜா, உதயநிதி போன்ற பல சினிமா பிரபலங்கள் அரசியலில் கால்பதித்துள்ளனர். இதில் 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு ரோஜா இயக்குநர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டார். பின்பு சினிமாவில் கிடைத்த பிரபலங்களை வைத்து அரசியலில் நுழைந்தார்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் 24 அமைச்சர்கள் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இதனால் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்று உள்ளனர்.

நகரி தொகுதி எம்எல்ஏ ஆன நடிகை ரோஜா இரண்டு முறை அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இதனால் இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காது அவரது தொண்டர் மத்தியில் மிகுந்த அதிருப்தியை இருந்தனர். இந்நிலையில் தற்போது ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

இவரை சேர்த்து 25 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை அறிந்த ரோஜா ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வீட்டின் முன் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்