Tamil Cinema News | சினிமா செய்திகள்
வேற வலியில்லாமல் சீரியலுக்கு தள்ளப்பட்ட லைலா.. எந்த சேனலில் என்ன சீரியல் தெரியுமா.?
தமிழ் திரையுலகில் வெள்ளித்திரையில் மார்க்கெட் போன நடிகைகள் எல்லாம் சின்னத்திரை சீரியலுக்கு வருவது வழக்கம்.
தற்போது இந்த பழக்கம் தலைகீழாக மாறி சீரியலில் இருந்து நடிகைகள் வெள்ளித்திரைக்கு போய்க் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறிருக்க, தற்போது 90களின் கன்னியாக வலம் வந்த பிரபலமான நடிகை பழைய ஃபார்முலாவின் படி சீரியலுக்கு வந்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.
அதாவது 90களின் முன்னணி நடிகையாக கலக்கியவர் தான் நடிகை லைலா. இவர் அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார்.
மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே இதுவரை வராமல் அவ்வப்போது அவருடைய குடும்ப புகைப்படங்களை மட்டும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார் லைலா.
இந்த நிலையில் லைலா பிரபலமான சீரியல் ஒன்றின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்து இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘கோகுலத்தில் சீதை’ என்ற சீரியலில் நடித்து வருகிறாராம் லைலா.

laila
மேலும் தொண்ணூறுகளில் எப்படி லைலா இருந்தாரோ, அதே முகப் பொலிவுடனும், தோற்றத்துடனும், கண்ணக்குழி சிரிப்புடனும் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் பலர், மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
