Connect with us
Cinemapettai

Cinemapettai

serial-gossip

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகையின் பரபரப்பான ட்வீட்டால் ஆடிப்போன OTT தளம்! லேட்டஸ்ட் நியூஸ்!

கொரோனா வைரஸ் காரணமாக கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருக்கின்றன.  இதனால் அனைத்து மொழிப் படங்களும் OTT தளங்களில் வெளியாகி வருகின்றன.

மேலும் வெப் சீரியல்களுக்கு சென்சார் இல்லை என்பதால் படுபயங்கரமான ஆபாச காட்சிகள் நிறைந்துள்ளன.

ott platforms cinemapettai

இந்த நிலையில் பாலிவுட் திரையுலகின் சிறந்த நடிகையும் தயாரிப்பாளருமான கங்கனா ரனாவத், தற்போது OTT தளங்களில் ஆபாசம் நிறைந்து வழிகிறது என்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சமூக வலைதளங்களில் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களோடு சல்மான் கான், கேத்ரீனா கைப், ரன்பீர் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் கொண்ட பல மீம்ஸ்களை பகிர்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.

kangana

kangana

மேலும் இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கங்கனா ரனாவத் தனது டுவிட்டரில் கடுமையாக விளாசியுள்ளார். அந்தப் பதிவில் கங்கனா, திரையரங்குகளில் திரைப்படங்களை குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பார்ப்பது திறந்த சமூக அனுபவம் என்றும், இதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் அந்தப் பதிவில் OTT- யில் வெளியாகும் ஆபாச காட்சிகளை பற்றி ‘படங்களுக்கு தணிக்கை முக்கியம். தணிக்கை என்பது நமது மனசாட்சி’ என்று தெரிவித்திருக்கிறார் கங்கனா.

மேலும் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல், ‘சர்ச்சைக்கு பெயர் போன இவங்க அட்வைஸ் பண்ண   ஆரம்பிச்சுட்டாங்களே’ என்ற சில ரசிகர்களின் கமெண்ட்களையும் பெற்று வருகிறது.

Continue Reading
To Top