Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாமி 2 ட்ரைலரை பங்கமாய் கலாய்த்த பிரபல நடிகை.! நடிகையை வருதேடுத்த ரசிகர்கள்.!
ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சாமி, சாமி படத்தின் இரண்டாம் பாகம் 15 வருடம் கழித்து எடுக்கப்பட்டுள்ளது அதனால் ரசிகர்களிடம் பலத்த எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சாமி 2 இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
படத்தின் ட்ரைலரை மே 26 ம தேதியே வெளியிட முடிவு செய்தார்கள் ஆனால் தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டதால் ட்ரைலர் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்ததாக தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தெரிவித்தார், இந்நிலையில், நேற்று ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘சாமி 2’ படத்தின் ட்ரைய்லரை படக்குழுவினர் வெளியிட்டார்கள்.
சாமி முதல் பாகம் எதிர்ப்பார்ப்பை இந்த ட்ரைலர் பூர்த்தி செய்ததா என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான், ரசிகர்கள் பலர் இந்த ட்ரைலரை பார்த்து தங்களது கருத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள், மேலும் நடிகை கஸ்தூரி விக்ரமின் ட்ரைலரை கலாய்த்து தனது டிவிட்டரில் ஒரு ட்வீட் செய்துள்ளார் இதற்க்கு பல ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள், அதில் அவர் கூறியதாவது முந்தா நாளு வந்த டீஸர் ல கலாய்ச்சிருந்த .அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா !
