10 மாதத்தில் 10 கோடி.. 20 வருஷமா நயன்தாரா அள்ளிய சம்பளத்தை பத்தே மாதத்தில் தட்டி தூக்கிய கிக்கான நடிகை

ஒருத்தனுக்கு 9 கிரகங்களும் உச்சம் பெற்றால்.. என்று சொல்லுவது போல, திடீரென்று வரும் அதிர்ஷ்டம் ஒருவர் வாழ்வையே தலைகீழாக மாற்றி விடும். அப்படி தான் பாலிவுட் நடிகைகள் வாழ்க்கையும். யார் எப்போது கோபுரத்துக்கு செல்வார், யார் தெருக்கோடிக்கு வருவார் என்று கணிக்கவே முடியாது.

20 வருடத்திற்கு மேல் நடிக்கும் நயன்தாராவே இப்போது தான் 10 கோடி சம்பளம் வாங்குகிறார். ஆனால் வெறும் 10 மாதத்தில் சம்பளத்தில் நயன்தாராவுக்கு போட்டியாக வந்து நின்றுள்ளார் அனிமல் பட நடிகை. பொதுவாக அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றாலே, பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், ராஷ்மிகா என்று தான் நினைப்போம்.

ஆனால், இவர்களுக்கே போட்டியாக மாறியுள்ளார் ஒரு புது முக நடிகை. ஒரே படம், ஒரே கட்சி, அவர் கேரியரை தூக்கி நிறுத்தியுள்ளது. இந்த நடிகை 10 மாதங்களில் தனது சம்பளத்தை ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளார். அது வேறுயாரும் இல்லை அனிமல் பட நடிகை திரிப்தி டிம்ரிதான்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ம் தேதி ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘அனிமல்’ படத்தில் நடித்து புகழ் பெற்றார். இப்படத்திற்காக திரிப்தி டிம்ரி ரூ.40 லட்சம் சம்பளம் பெற்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து, விக்கி கவுசல் ஜோடியாக ‘பேட் நியூஸ்’ படத்தில் நடித்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் 80 லட்சம் சம்பளமாக பெற்றிருந்தார். இந்த படத்திற்கு பிறகு அவர் தனது கட்டணத்தை ரூ.6 கோடியாக உயர்த்தியதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது திரிப்தி டிம்ரி தனது கட்டணத்தை ரூ.10 கோடியாக உயர்த்தியுள்ளார்.

இது பல முன்னணி நடிகைகளின் சம்பளம், ஒரே படத்தில் வந்த ஜாக்பாட்டை சரியாக பயன்படுத்தியுள்ளார் இந்த நடிகை.காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இவரது சம்பளம் அசுர வளர்ச்சி பெற்று உள்ளது. இதனால் மற்ற நடிகைகளின் எதிர்பார்ப்பு அதிகரிக்க கூடும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News