fbpx
Connect with us

வட சென்னையில் சமந்தா நடிக்க மறுத்த இடத்தில் பிரபல நடிகை தேர்வு?

வட சென்னையில் சமந்தா நடிக்க மறுத்த இடத்தில் பிரபல நடிகை தேர்வு?

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் ‘வடசென்னை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகி சமந்தா என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமந்தாவுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் அவருக்கு பதில் வேறு நாயகியை படக்குழுவினர் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ‘விஐபி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த அமலபால், தனுஷ் தயாரித்த ‘அம்மா கணக்கு’ படத்திலும் நடித்து’ நல்ல பெயரை வாங்கினார். எனவே அவர்தான் இந்த படத்தின் மூன்று பாகங்களிலும் தனுஷ் ஜோடியாக நடிப்பார் என தெரிகிறது.

பிரமாண்டமான ஜெயில் செட்டில் நடைபெற்று வரும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அமலாபால் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top