கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம் என ஆரம்பகால கட்ட படங்களில் இழுத்து போர்த்திக்கொண்டு நடித்து வந்தார் ரெஜினா. அது வேலைக்காகவில்லை.

Regina

3 வருடம் கோலிவுட்டில் வாய்ப்பில்லாமல் முடங்கிக்கிடந்தார். ஒன்றிரண்டு தெலுங்கு படங்களில் நடித்துப்பார்த்தார், அதுவும் கைகொடுக்கவில்லை.

பிறகு கவர்ச்சியாக நடிக்க முடிவெடுத்தார். மீண்டும் பட வாய்ப்புகள் துளிர்விட ஆரம்பித்து சூடுபிடித்தது.

கடந்த 2016ம் ஆண்டில் தமிழில் ஒரு படம்கூட கைவசம் இல்லாத நிலையில் இந்த ஆண்டு சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மாநகரம் படங்களில் கவர்ச்சி ஹீரோயினாக புதிய அவதாரத்துடன் நடிக்கத் தொடங்கினார்.

Regina

தற்போது மேலும் 3 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இளம் நடிகைகள் என்ட்ரி அவரது வாய்ப்புகளை தட்டிபறித்த வண்ணமிருக்கிறது.

அடுத்த ஆண்டுக்கு, ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்ற ஒரு படத்தில் மட்டுமே நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார்.

தெலுங்கில் அதுவும் இல்லை. மறுபடியும் ஒரு காட்டு காட்டினால் தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்தவர் சமீபத்தில் அதிரடி கவர்ச்சி போட்டோ செஷன் நடத்தி படுகவர்ச்சியான ஸ்டில்களை இணைய தளத்தில் பரவ விட்டிருக்கிறார்.

regina

இது போதுமா? இன்னும் கொஞ்சம் கவர்ச்சி வேணுமா என்று கேட்பதுபோல் முகபாவனையும் காட்டி திரையுலகினரை மீண்டும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.

இது மற்றொரு ரவுண்டுக்கு கைகொடுக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.