ஹாலிவுட்டில் 1970-களில் இருந்து பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் Carrie Fisher. குறிப்பாக Star Wars சீரிஸில் வரும் லியா எனும் கதாபாத்திரத்தில் இவர் இளவரசியாக பிரபலமடைந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டனில் படப்பிடிப்பில் இருந்தபோது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனே இவரை அங்கிருந்து லாஸ் ஏஞ்செல்ஸுக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை பலனின்றி அமெரிக்க நேரப்படி இவர் நேற்று காலை 8 மணியளவில் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்கள் திரை பிரபலங்கள் டிவிட்டரில் இவருக்கு இரங்கல் செய்தி தெரிவித்து வருகிறார்கள்.

Carrie-Fisher