சினிமாவில் கொலை, கொள்ளை, தற்கொலை நடக்கிறதோ இல்லையோ சினிமா நடிகர்களின் நிஜ வாழ்கையில் தற்பொழுது அடிக்கடி நடைபெறுகிறது.

இப்போ பாகிஸ்தான் நாட்டில் பிரபல நடிகை மற்றும் ஸ்டேஜ் டான்ஸ் கலைஞர் குயிஸ்மட் பெய்க், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தள்ளியது. இதில் ஒருவன் இனி நீ எப்படி ஆடுவாய் என்று பார்க்கிறோம் என்று சொன்னதாக செய்தி வந்துள்ளது.

மேலும் அந்த நடிகை மீது 12 குண்டுகள் பாய்ந்ததாக பிரேத பரிசோதனை குறிப்பில் வந்துள்ளது. அந்த காரை ஓட்டி வந்த டிரைவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அந்த நடிகையின் கொடூர கொலை சம்பவம் பாகிஸ்தான் நாட்டவரை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.