Tamil Cinema News | சினிமா செய்திகள்
முடிஞ்ச வரைக்கும் சுருட்டிட்டு செட்டில் ஆகிடனும்.. டூ பீஸ் கூட ஓகே தான்.. ஒரு வழிக்கு வந்த நடிகை
சமீபகாலமாக கவர்ச்சி எல்லாம் காட்ட மாட்டேன் எனவும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஒப்புக்கு நடிக்க மாட்டேன் எனவும் ரொம்ப கறார் காட்டி வந்தவர் அந்த பிரபல நடிகை. அவர் எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் வரவில்லை. பத்தாததற்க்கு காதல் என்ற பெயரில் அம்மணி அடிக்கும் கூத்துக்களுக்கு அளவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. ஏதோ முதல் தடவை காதல் செய்வதை போல் அநியாயத்துக்கு ரொம்ப பண்ணுகிறார் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.
இதையெல்லாம் அந்த பிரபல நடிகையின் காதலரான இயக்குனர் கண்டும் காணாமல் இருந்து வருகிறாராம். வேற வழி இல்ல அவருக்கு. காதலியை பற்றி கவிதையாய் புகழ்ந்து தள்ளும் இயக்குனரை இதெல்லாம் எங்க விரல் நடிகர் எப்போவே செய்து விட்டார் என அவரது ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகின்றனராம்.
சமீபகாலமாக அம்மணிக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டனவாம். ஆனால் தான் தற்போது உச்ச நடிகர் படத்தில் கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பரவாயில்லை என காசுக்காக நடிக்க ஒத்துக் கொண்டாராம். இதன் பின்னணியில் விரைவில் எவ்வளவு பணம் சுருட்ட முடியுமோ சுருட்டிக் கொண்டு செட்டிலாகி விட வேண்டும் என்பதுதான் திட்டமாம்.
பணத்தை குறிக்கோளாகக் கொண்டு களமிறங்கியிருக்கும் அந்த நடிகை சமீபத்திய விருது விழாவில் முன்னழகு தெரியும்படி உடை அணிந்து வந்தது அனைவரின் கண்ணையும் பறித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பசியில் காத்திருந்தவனுக்கு பிரியாணி கிடைத்ததை போல கவர்ச்சியை மறைத்து வைத்திருந்த நடிகை திடீரென கவர்ச்சி காட்டியதும் மொத்த சமூக வலைதளங்களும் கிறங்கிப் போய் ஜொள்ளு விட்டார்களாம்.
இதையே கணக்கில் எடுத்துக் கொண்ட நடிகை தற்போது எந்த அளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்ட ரெடி எனவும், கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பரவாயில்லை நான் நடிக்கிறேன் எனவும் முன்னணி நிறுவனங்களுக்கு தூது விட்டு வருகிறாராம். போதாக்குறைக்கு டூ பீஸ் கூட ஓகே எனவும் கூறியதால் அம்மணியை அரைகுறை ஆடையில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க முன்னணி தயாரிப்பாளர்கள் அம்மணியின் வீட்டை நோக்கி படையெடுத்துவிட்டதாக ஒரு செய்தி.
இடையில் காதலர் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என நச்சரித்து வருவதாகவும் தெரிகிறது. பணமா காதலரா என்று வந்தால் நிச்சயம் பணமாக இருக்கலாம் எனவும் காதலருக்கு ஆப்புதான் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர். இருந்தும் நாயகிக்கு இப்படி ஒரு ஆள் கிடைக்க மாட்டார் என்பதால் விரைவில் திருமணம் செய்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
