fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்த சன்டிவி பிரபல நடிகை.. அட இவங்க வித்தார்த்க்கு ஜோடி போட்டவங்க ஆச்சே.!

viddarth-suntv

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமாவை விட்டு சீரியலுக்கு வந்த சன்டிவி பிரபல நடிகை.. அட இவங்க வித்தார்த்க்கு ஜோடி போட்டவங்க ஆச்சே.!

சினிமாவிற்கு நிகராக சீரியல்களும் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பறந்த நடிகைகளைப் போலவே, இப்பொழுது வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு இளம் நடிகைகள் வரத் தொடங்கி உள்ளனர். ஏனென்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகியுள்ளார் டெல்னா டேவிஸ்.

இந்த சீரியலில் கதாநாயகனான வருண் மற்றும் கதாநாயகியாக பூமிகா கதாபாத்திரத்தில் டெல்னா டேவிஸ் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு இடையேயான ரொமான்ஸ் சீரியல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது டெல்னா டேவிஸ், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர காரணம் என்ன என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

முறைப்படி பரதம் கற்றுக் கொண்டிருந்த டெல்னா டேவிஸ், பரதநாட்டியத்தை அரங்கேற்றம் செய்த போது, பிரபல மாடலிங் சூட் நிறுவனம் அவரை கண்டு வாய்ப்பை அளித்துள்ளது. அதற்கு எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்களை பார்த்த பிரபல சினிமா இயக்குனர்கள் மூலமாக ‘குரங்கு பொம்மை’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு டெல்னா டேவிஸ்க்கு கிடைத்துள்ளது.

எனவே கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வந்த குரங்கு பொம்மை திகில் திரைப்படத்தில் விதார்த், பாரதிராஜா, கஞ்சா கருப்பு, டெல்னா டேவிஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதன்பின்பு தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் வரிசையாக படத்தில் நடித்துக்கொண்டிருந்தார் டெல்னா டேவிஸ்.

அதன்பின் 3 வருடம் சினிமாவை விட்டு விலகி உள்ளார். ஏனென்றால் பிஎல் படித்து முடிக்க வேண்டும் என்பதால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த டெல்னா டேவிஸ், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘அன்பே வா’ சீரியலின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளார்.

Delna Davis

Delna Davis

அத்துடன் இந்த சீரியலில் தன்னுடன் நடிக்கும் கதாநாயகனான வருண் உடன் சேர்ந்து செய்யும் இன்ஸ்டா ரீல்ஸ்களுக்கு அவருடைய ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளை தட்டி விடுகின்றனர். தற்போது சின்னத்திரையில் மிகச்சிறந்த அடையாளமாக மாறிவரும் டெல்னா டேவிஸ் சோசியல் மீடியாக்களில் விதவிதமான போட்டோஸ்களை அப்லோட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top