Tamil Cinema News | சினிமா செய்திகள்
12 வருடம் கழித்து பாம்பாட்டம் போட வரும் நடிகை.. அப்ப கவர்ச்சிக்கு பஞ்சமே இல்ல
தமிழ் சினிமாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தர இருக்கும் பிரபல கவர்ச்சி நடிகையை வரவேற்க இருக்கின்றனர் தமிழக இளைஞர்கள். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக உச்சகட்ட கவர்ச்சியில் நடித்து ரசிகர்களை கிறங்க வைத்தவர் மல்லிகா ஷெராவத்.
பிறகு சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பார். ஹிந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் மல்லிகா ஷெராவத் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது திரில்லர் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

mallika-shreawath
திருட்டுப் பயலே நான் அவனில்லை படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜீவன். இவர் சூர்யாவுக்கு காக்க காக்க படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார். தற்போது இவர் பாம்பாட்டம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
பாம்பாட்டம் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக கலக்க இருக்கிறார் மல்லிகா ஷெராவத். தசாவதாரம் படத்திலேயே தமிழக ரசிகர்களை ஒரு உலுக்கு உலுக்கி இருப்பார். மீண்டும் இவர் தமிழுக்கு வருவதால் எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளன.
நம்ம பசங்க பயப்பட மாட்டாங்களே?
