நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் கொச்சின் பகுதியில் தனது படப்பிடிப்பு முடிந்து சென்ற போது காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகினார். பாவனாவை கடத்திய கும்பல் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, அதனை வீடியோவாகவும் எடுத்ததாக கூறப்பட்டது.

இந்த கடத்தல் வழக்கில் பல்சர் சுனில் என்பவரை போலீஸார் முக்கிய குற்றவாளியாக கைது செய்தனர். இந்த கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் மற்றும் அவரின் இரண்டாம் மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  பகவத்கீதையை கொச்சைப்படுத்தும் சர்ச்சை கருத்து! வைகோ

இருவரும் போலீசாரின் கைதுக்கு பயந்து தற்போது தலைமறைவாக உள்ளனர். கடந்த 1ம் தேதி காவ்யா மாதவன் அலுவலத்தில் சுமார் 3 மணிநேரம் போலீசார் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை எடுத்தனர்.

மேலும் காவ்யா மாதவன் மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா ஆகியோரிடமும் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடத்தல் தொடர்பான சில உண்மையை அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.பாவனா கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பவரை திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார்.

இந்த விவாகரம் மலையாள சினிமா உலகை சேர்ந்த சில நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

அதிகம் படித்தவை:  வண்ணமயமான ஆடையுடன் பிரான்ஸை கலக்கிய தீபிகா படுகோனே

எனவே, பல்சர் சுனிலை பயன்படுத்தி பாவனாவை காரில் கடத்தி அவரை அலங்கோலமாக வீடியோ எடுத்து, அதை அவரின் காதலர் நவீனுக்கு அனுப்பி வைத்து எப்படியாவது பாவனா திருமணத்தை நிறுத்த வேண்டுமென அந்த வீடியோவில் பாவனாவிடம் மிரட்டியுள்ளனர்.

இருந்த போதிலும் போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் அந்த வீடியோ வெளியே வரமால் இருந்தது.ஆனால் கடந்த மார்ச் மாதம் பாவனாவும், நவீனும் திருமணம் செய்து கொண்டனர்.