Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல திரைப்பட மற்றும் சீரியல் நடிகை மரணம்.. சோகத்தில் திரையுலகம்

குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிக்க தொடங்கியவர் நாஞ்சில் நளினி. அவர் தன்னுடைய 12 வயது முதல் நடித்து வந்தார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த நாஞ்சில் நளினி, சிவாஜி கணேசன் நடித்த எங்க ஊர் ராஜா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு சிவாஜி கணேசனுடன் அண்ணன் ஒரு கோயில், தீர்ப்பு, தங்கப்பதக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மந்திர வாசல், அச்சம் மடம் நாணம், பிருந்தாவனம், சூலம் என பல சீரியல்களில் நாஞ்சில் நளினி நடித்திருக்கிறார். தமிழக அரசின கலைமாமணி விருது பெற்றவர் ஆவார்.

nanjil-nalini

nanjil-nalini

சென்னை வேளச்சேரியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த நாஞ்சில் நளினி, கடந்த சில தினங்களாக உடல் நலமில்லாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு தென்னிந்திய திரையுலத்தினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top