Tamil Cinema News | சினிமா செய்திகள்
#metoo வில் சிக்கிய அர்ஜுன்? அர்ஜுன்க்கு வந்த சோதனை.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்
உண்மையோ இல்லையோ முதலில் கிளப்பி விடுவோம் பிறகு வரப்போகின்ற பிரச்சினைகளை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கின்றனர் தமிழ் நடிகைகள். தினமும் ஒரு நடிகைகள் ஒரு முக்கிய நடிகர்களை குறி வைத்து tweet போட்டுக் கொண்டே போகின்றனர். சின்மயி விவகாரத்தில் ஒரு முடிவு தெரிந்திருந்தால் இதனை தடுத்து இருக்கலாம் ஆனால் அவர்களை இழுத்துக் கொண்டு செல்வதால் அவர் பெயரும் பிரபலமானதால் அனைத்து நடிகைகளும் இப்பொழுது கிளம்பிவிட்டனர்.
நிபுணன் படத்தில் நடித்த பொழுது சில காட்சிகளில் இறுக்கி கட்டிப்பிடித்தார், தனியாக அறைக்கு கூப்பிட்டார் செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார் என வரிசையாக பிரபல நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்தார் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். மேலும் அவர் கூறியதாவது பாடல் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் டேக் வாங்கி கொண்டே நடித்தார். 50 பேர் கொண்ட ஷூட்டிங்கில் எல்லார் முன்னிலையிலும் அர்ஜுன் அப்படி நடந்துகொண்டார். பாதியில் படப்பிடிப்பை விட்டு சென்றால் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவார் என அதனைப் பொறுத்துக் கொண்டு இருந்தேன் என்று தெரிவித்தார்.
மேலும் அவருடைய அறைக்கு வருமாறு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்தார். அதிலும் விருந்துக்கு செல்லலாமா என்றே இரட்டை அர்த்தத்தில் என்னை அழைப்பார். நான் அவருடைய அறைக்கு செல்லவில்லை என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

nibunan-arjun-shruthi
இதுபற்றி அர்ஜுன் அறிக்கையில்’நான் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை என்னைப் பற்றி இப்படி ஒரு செய்திகள் வந்ததில்லை. என்னை பற்றி அனைவருக்கும் தெரியும். என் மேல் கூறப்பட்ட புகாருக்கு கண்டிப்பாக நான் வழக்கு தொடர்வேன்’ என்று கூறினார்.
இதுகுறித்து நிபுணன் படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் கூறியது ‘அர்ஜுன் மற்றும் ஸ்ருதி இரண்டு பேரும் எனக்கு நண்பர்கள் அவர் குடும்பங்களையும் எனக்கு தெரியும் அர்ஜுன் மீது ஸ்மிருதி புகார் அளித்திருப்பது எனக்கு மிகவும் அதிர்ச்சி கொடுக்கிறது ஏனென்றால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை அர்ஜுனும் அப்படிப்பட்டவரல்ல இன்னும் சொல்லப்போனால் ஒரு சில காட்சிகளில் மிகவும் கவர்ச்சியாக நடிக்க வேண்டி இருந்தது ஆனால் அதற்கு அர்ஜுன்’ நான் இரண்டு பெண்களுக்கு தகப்பன் என்னால் அப்படியெல்லாம் நடிக்க முடியாது என்று கூறி தவிர்த்தார் என்று கூறினார்’.
