fbpx
Connect with us

Cinemapettai

பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரபல நடிகை ரஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: பிரபல நடிகை ரஷ்மிகா மந்தண்ணா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதே நேரம் பல கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், விராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் ரஷ்மிகா மந்தண்ணா. இவர் சில கன்னடா படங்களில் நடித்து பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் புகழ் பெற்ற நடிகையாக உள்ளார். விஜய் தேவரகொண்டா, மகேஷ் பாபு உள்பட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக மகேஷ் பாபுக்கு ஜோடியாக சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் நடித்தார். இந்த படம் கடந்த ஜனவரி 11 ம் தேதி வெளியானது.

இந்நிலையில் குறுகிய காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ரஷ்மிகா மீது வருமான வரித்துறைக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் குடகு மாவட்டம், விராஜ்பேட்டையில் உள்ள ரஷ்மிகாவின் இல்லத்திற்கு நேற்று காலை 7.30 மணிக்கு வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 3கார்களில் அவ சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ரஷ்மிகா வீட்டில் இல்லை. அவரது தந்தை மட்டுமே இருந்தார். அவரிடம் கர்நாடகாவின் பிட்டங்கலாவில் ஆரம்பிக்க உள்ள சர்வதேச பள்ளிக்கூடம், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் ரஷ்மிகாவின் வருமானம் மற்றும் அவர் அண்மையில் வாங்கி குவிந்த சொத்துக்கள், அதற்கு முறையாக வருமான வரி கட்டப்பட்டதா என்பது உள்ளிட்ட சோதனை செய்தனர்.

இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அல்லது ரஷ்மிகா வரி ஏய்ப்பு செய்திருந்தாரா என்பது உள்ளிட்ட எந்த விவரத்தையும் வருமான வரித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top