Tamil Cinema News | சினிமா செய்திகள்
நள்ளிரவு பார்ட்டி… அதிகாலை விபத்தில் சிக்கிய நடிகையின் கார்…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஜாக்குலின் பெர்னாண்டஸ் பயணித்த கார் மும்பையில் அதிகாலை நேரத்தில் விபத்தில் சிக்கியது.

Jacqueline Fernandez
ரேஸ் பட வரிசையில் மூன்றாவது படத்தில் சல்மான் கான், பாபி தியோல், அனில் கபூர், டெய்சி தியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள ரேஸ் 3, படத்தில் நாயகியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். இந்தநிலையில், மும்பையில் உள்ள தனது அபார்ட்மென்டில் படக்குழுவினருக்கு நடிகர் சல்மான் கான் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார்.
இரவு 10.30க்கு மேல் தொடங்கி பார்ட்டி 2 மணிக்கு மேல் வரை நீண்டுள்ளது. இதில், கலந்துகொண்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ், அதிகாலை 2.20 மணியளவில் சல்மான் கானின் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, அவர் பயணித்த கார், அதிகாலை 2.30 மணியளவில் விபத்தில் சிக்கியது. ஜாக்குலின் கார் மீது ஆட்டோ ஒன்று மோதியதில், காரின் முகப்பு விளக்குகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆட்டோ டிரைவர் குடித்துவிட்டு தங்களது வாகனத்தின் மீது மோதியதாக ஜாக்குலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்ததை உறுதிப்படுத்திய ஜாக்குலின் பெர்னாண்டஸ், நள்ளிரவில் எங்கள் கார் மீது திடீரென ஆட்டோ ஒன்று வந்து மோதியது. நல்லவேளையாக விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. காரை என்னுடைய டிரைவர் ஓட்டி வந்தார். ஆட்டோ டிரைவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதாக போலீசார் கூறினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பிரச்னையைத் தீர்த்து வைத்தனர். இந்த விவகாரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுப்பேன் என்று கூறி முடித்துள்ளார். சல்மான் கான் பார்ட்டிக்குப் பின்னர் நடந்த இந்த விபத்து குறித்து பாலிவுட் திரையுலகமே பேசிக்கொண்டிருக்கிறது.
