Tamil Cinema News | சினிமா செய்திகள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைகள்..
கடந்த 4ஆம் தேதி புற்றுநோய் தினம் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எப்படி எடுக்க வேண்டும் என்பதை ஒரு சில அறக்கட்டளைகள் இலவசமாக வழங்கினர்.
தமிழ் சினிமாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகைகளின் வாழ்க்கை தற்போது எப்படி உள்ளது,

gauthami
90களில் கொடிகட்டிப் பறந்த கௌதமி தனது 35வது வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் தற்போது முழுமையாக மீண்டு உள்ளார், இதற்கு கமலஹாசன் முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று பேட்டியில் தெரிவித்து இருப்பார். நோய் குணமான பின் தற்போது அறக்கட்டளை ஒன்று வைத்து மக்களுக்கு புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

manisha
பம்பாய், இந்தியன், முதல்வன் ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவருக்கு கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் அவஸ்தைப்பட்டு பின்பு குணப் படுத்தி உள்ளார். கௌதமி போலவே அறக்கட்டளை ஒன்றை வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

sonali
பாலிவுட்டில் கொடிகட்டி பறந்த நடிகை சோனாலி பிந்த்ரே, இவரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது 30 சதவீத வாழ்க்கையை மருத்துவமனையில் கழித்துள்ளார். இவர் காதலர் தினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவார். தற்போது குணப்படுத்துவதற்கான விழிப்புணர்வை அவர் கடந்து வந்த பாதையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்.

kanaga
கரகாட்டக்காரன் படத்தின் மூலம் பிரபலமான கனகா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது பாதி வாழ்க்கையை மருத்துவமனையில் கழித்தவர். அவரும் இந்த நோயிலிருந்து மெல்லமெல்ல உயிர் பிழைத்து தற்போது நல்ல நிலையில் உள்ளார்.
