Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் வீட்டில் முதலில் இந்த மொக்க பீசு எல்லாம் துரத்துங்க.. உச்சகட்ட கடுப்பில் பிரபல நடிகர் போட்ட ட்வீட்!

big-boss-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் வீட்டில் முதலில் இந்த மொக்க பீசு எல்லாம் துரத்துங்க.. உச்சகட்ட கடுப்பில் பிரபல நடிகர் போட்ட ட்வீட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி அனுதினமும் தன்னுடைய சுவாரஸ்யத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் பிக் பாஸ் சீசன் 4  நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்த பிறகும் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான சம்பவமும் நிகழவில்லை. அதுமட்டுமில்லாமல், மூன்று சீசன்களை பார்த்து வந்ததாலோ என்னவோ சண்டை போட்டாதான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்க முடியும்னு நினைச்சுக்கிட்டு, அனுதினமும் சண்டை போடுறாங்க பிக் பாஸ்4 கன்டஸ்டன்ட்கள்.

இதனால் சிலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நோக்கி ஈர்க்கபட்டாலும், பலருக்கு இந்த நிகழ்ச்சியின் மீது வெறுப்பு தான் அதிகமாக உள்ளது.

அந்த வகையில் தமிழில் பிரபல நடிகரான பரத் இந்த நிகழ்ச்சியைப் பற்றி தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக விளங்கியவர் தான் பரத். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

மேலும் நடிகர் பரத் தன்னுடைய ட்வீட்டில், ‘பிக் பாஸ் சீசன் 4ல இருக்க வெத்துவேட்டுங்களயெல்லாம் வெளிய அனுப்புனா தான் நல்ல கண்டெண்ட் கிடைக்கும். அதனால சீக்கிரமா அனுப்புங்க!’ என்று பதிவிட்டிருக்கிறார்.

Barath-tweet

Barath-tweet

இந்த ட்விட்டின் மூலம் சனம், பாலா, அனிதா, அர்ச்சனா, நிஷா, ரியோ ஆகியோரை தான் மறைமுகமாக பரத் கூறியிருக்கிறாரே என்ற சந்தேகம்  பிக்பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top