Connect with us
Cinemapettai

Cinemapettai

40-age-no-marriage hero

Tamil Cinema News | சினிமா செய்திகள்

40 வயதை தாண்டியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் 5 நடிகர்கள்.. சக்திமான் முதல் பாகுபலி வரை இதான் நிலைமை போல!

எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கினாலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாத நடிகர்கள் கோலிவுட் இதிலிருந்து பாலிவுட் வரை வலம் வந்து கொண்டிருக்கின்றன. 40 வயதாகியும் இதுவரைக்கும் திருமணம் செய்துகொள்ளாமல் இன்னும் முரட்டு சிங்கள் ஆகவே உள்ள பிரபலகளின் லிஸ்ட் தற்போது பார்க்கலாம்.

எஸ் ஜே சூர்யா: அஜீத்தை வைத்து வாலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. அதன் பிறகு விஜய்யுடன் குஷி படத்தில் இணைந்தார். படங்களை இயக்கிய வந்த எஸ் ஜே சூர்யா ஒரு கட்டத்திற்கு பிறகு நடிப்பதில் ஆர்வம் செலுத்தி ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர் போன்ற பல படங்களில் ஹீரோ வில்லன் என அனைத்து கதாபாத்திரங்களும் நடித்து உள்ளார்.

Actor SJ Surya in Iraivi Tamil Movie Stills

பல படங்களில் நடித்து வரும் எஸ் ஜே சூர்யா 52 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

பிரேம்ஜி: வெங்கட் பிரபுவின் தம்பியும் மற்றும் நடிகருமான பிரேம்ஜி தற்போது வரை பல படங்களில் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் பாடகராக அறிமுகமான பிரேம்ஜி அதன் பிறகு காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார்.

premgi

வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து படத்திலும் தனது தம்பியான பிரேம்ஜி நடித்திருப்பார். தற்போது கூட வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரியலில் நடித்துள்ளார். 41 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.

சல்மான் கான்: ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ரசிகர்களின் தாண்டி வசூலை வாரி குவித்து வருகிறது. ஆனால் 55 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

salman-khan

salman-khan

பிரபாஸ்: பாகுபலி படத்திற்கு பிறகு புகழின் உச்சத்தில் இருப்பவர் பிரபாஸ். அனுஷ்காவிற்கு பிரபாஸ்விற்கும் காதல் ஏற்பட்டதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வெளிவந்தன. ஆனால் அதைப்பற்றி இருவருமே வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. 41 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

prabhas-cinemapettai

prabhas-cinemapettai

முகேஷ் கண்ணா: சக்திமான் சீரியலில் நடித்த முகேஷ் கண்ணாவை தெரியாத 90 கிட்ஸ்களே இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு பிரபலம் அடைந்த முகேஷ் கண்ணா 62 வயதாகும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்.

mukesh khanna

mukesh khanna

Continue Reading
To Top