Tamil Cinema News | சினிமா செய்திகள்
முன்னணி நடிகர்கள் தவறவிட்டு மெகா ஹிட் ஆன திரைப்படங்கள் லிஸ்ட் இதோ.!

சினிமாவில் சில நடிகர்கள் மட்டுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர்களாக இருக்கிறார்கள், பல நடிகர்களுக்கு நல்ல படம் அமைவது கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏன் என்றால் பல படங்கள் முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கடைசி நேரத்தில் கைமாறி போன கதை நாம் அறிந்திருக்கிறோம் அந்த லிஸ்டில் கடைசி நேரத்தில் கை மாறிப்போன படத்தின் லிஸ்டை பார்க்கலாம்.
ரோஜா: ரோஜா திரைப்படம் முதன் முதலில் ராஜீவ் மேனன் தான் நடிக்க இருந்தது ஆனால் அவர் நடிக்காததால் அந்த படத்தில் அரவிந்த்சாமி நடித்தார்.
சூது கவ்வும்: சூது கவ்வும் படத்தில் முதலில் வடிவேல் தான் நடிக்க கமிட் ஆனார் ஆனால் வடிவேல் இந்த வாய்ப்பை கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார் அதனால் இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு போனது.எந்திரன்: இந்திரன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல் தான் ஆனால் சில காரனங்களால் இந்த படம் ரஜினிக்கு சென்றுவிட்டது.
அனேகன்:தனுஷ் நடித்த அனேகன் படத்தின் கதை முதலில் தளபதி விஜய்க்கு தான் எழுதப்பட்டது ,ஆனால் அவர் படத்தில் பிசியாக இருந்ததால் அவரை காமிட் செய்ய முடியாமல் கடைசியில் தனுஷிக்கு சிக்கியது.
சந்திரமுகி: ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் முதலில் ஜோதிகாவுக்கு பதில் சிம்ப்ரன் தான் நடிக்க இருந்தது, சிம்ரன் அந்த நேரத்தில் கர்ப்பம் அடைந்துவிட்டதால் அந்த வாய்ப்பு ஜோதிகாவுக்கு சென்றது.
ராஜா ராணி: ஆர்யா,ஜெய் நடித்த ராஜா ராணி படத்தில் ஜெய்க்கு பதிலாக சிவாதான் நடிக்க இருந்தார் ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமானதால் சிவாவை கழட்டிவிட்டுவிட்டார் அட்லி.அதன் பின்பு தான் அந்த வாய்ப்பு ஜெய்க்கு வந்தது.
