Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித், சுதா கொங்கராவின் தல61 பட ஹீரோயின் யாரு தெரியுமா? அதுவும் அந்த இளம் நடிகரின் மனைவியாம்!
தமிழ் சினிமாவில் தற்போது வித்தியாசமான கதைகளின் மூலம் பிரம்மாண்ட படைப்புகளை வழங்கும் பெண் சிங்கம் தான் இயக்குனர் சுதா கொங்கரா.
இவர் சூர்யாவின் ‘சூரரைப் போற்றி’ படத்தை அடுத்து, அஜித்துக்கு என்றே ஒரு ஆக்சன் படத்தை உருவாக்கி தலைய வேற லெவல்ல ரசிகர்களுக்கு காமிக்க சுதா கொங்கரா முடிவெடுத்துள்ளார்.
அதற்கான ஸ்கிரிப்ட் வேலை எல்லாம் முடிந்த நிலையில், தல அஜித்துக்கு வழக்கம்போல் கதாநாயகியாக நயன்தாரா அனுஷ்காவை தேர்வு செய்யாமல், கொஞ்ச வித்தியாசமாய் ஹைட் வெயிட்டான ஹீரோயினை, தல ரேஞ்சுக்கு தேடிக்கொண்டிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
இதனை அறிந்த ரசிகர்கள், நீங்க எதிர்பார்க்கிற எல்லா விஷயமும் ஆர்யாவின் பொண்டாட்டி சாயிஷாவிற்கு இருப்பதால் அவரை ட்ரை பண்ணுங்களே என்று ரசிகர்களின் தரப்பிலிருந்து ரெகமெண்டேஷன் குமிகிறது.
சாயிஷாவும் அவ்வப்போது சமூகவலைதளங்களில் தல அஜித்தை ரசித்து பல ஸ்டேட்மெண்ட்களை தட்விடுவதால், அவருடைய ரசிகர்களின் மத்தியில் தலையின் அடுத்த தலைவி இவர்தான் என்ற அளவிற்கு பேமஸ் ஆகி இருப்பதால்தான் இந்தப்படத்தில் சாயிஷாவின் பெயர் அடிபடுகிறது.

arya-sayyeshaa-cinemapettai-1
‘பழகப் பழக பாலும் புளிக்கும்’ என்பதற்கு ஏற்ப, இதுவரை தல அஜித்துடன் ஜோடி சேர்ந்த ஹீரோயின்களை தவிர்த்து, புதுசா ஒரு ஹீரோயினை அஜித்துக்கு ஜோடியாக தேர்வு செய்து பிரம்மாண்டமான ஆக்சன் படத்தை ரசிகர்களுக்கு விருந்தளிக்க தயாராகிவிட்டார் இயக்குனர் சுதா கொங்கரா.
