அந்த நடிகையை விட எனக்கு சம்பளம் கம்மி.. இந்த உதாறுலாம் என்கிட்ட வேணாம்! ப்ரித்விராஜ்

தற்போது சினிமாவைப் பொருத்தவரை ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் உடனே நடிகர்கள் அதிகம் சம்பளம் கேட்பதாக தயாரிப்பு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மலையாள சினிமாவில் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பு சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இளம் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. மறுபக்கம் படம் வெற்றியடைந்தால் உடனே தயாரிப்பாளர்கள் லாபத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு படம் தோல்வியடைந்தால் நடிகர்கள் மீதும், இயக்குனர்கள் மீதும் குறை கூறிவிடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் படம் லாபம் பெறும் போது தாங்கள் மட்டுமே அடைந்து கொண்டு நஷ்டம் அடைந்தால் அதில் நடிகர்கள் பங்கு கொடுக்க வேண்டும் என கூறுவார்கள் என ஒரு பக்கம் குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து தற்போது மலையாள நடிகர் பிரித்திவிராஜ் பேசியுள்ளார்.

தற்போது நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கத்திலும் முழுமையாக பிரித்விராஜ் செயல்பட்டு வருகிறார். மலையாள சினிமாவில் தற்போது ஹீரோக்களின் சம்பளம் குறித்து அதிகம் பேசப்படுவதால் இதுகுறித்து கேள்வி பிரித்விராஜ் இடம் கேட்கப்பட்டது .

அதாவது சினிமாவில் சம்பளம் என்பது ஒருவரின் அந்தஸ்தை வைத்துதான் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கும் சமமான ஊதியம் பெற அனைத்து உரிமையும் உள்ளது. நான் ராவணன் படத்தில் நடித்தபோது எனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யாராயின் சம்பளம் அதிகம். அவரை விட எனக்கு சம்பளம் மிகக் குறைவுதான்.

அவ்வாறு ஒரு படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அந்தஸ்தை பொருத்தே சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் படங்களின் வெற்றி, தோல்வியை பொருத்தும் சம்பளமும் உயருகிறது.

ஒரு நடிகர் அதிகமாக சம்பளம் கேட்கிறார் என்று தயாரிப்பாளர்கள் கருதினால் தங்களது படத்தில் அவர்களை நடிக்க வைப்பதை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்யவேண்டும் என பிரித்விராஜ் கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்