fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விமர்சையாக நடைபெற்ற நயன், விக்கி திருமணம்.. தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்திய பிரபல நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விமர்சையாக நடைபெற்ற நயன், விக்கி திருமணம்.. தாலி எடுத்துக் கொடுத்து வாழ்த்திய பிரபல நடிகர்

கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் தான். கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் நயன்தாரா பல காதல் சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் விக்னேஷ் சிவன் உடனான காதலும் சில வருடங்களிலேயே முறிந்த விடும் என பலரும் விமர்சித்து வந்தார்கள். ஆனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் திருமணத்தின் மீது மிக உறுதியாக இருந்தனர்.

இந்நிலையில் கோலிவுட்டே பிரமிக்கும்படி இவர்களது திருமணம் இன்று நடந்துள்ளது. விக்னேஷ் சிவன் பட்டு வேட்டி சட்டையிலும், நயன்தாரா சிவப்பு நிற புடவையிலும் காட்சியளித்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவனுக்கு தாலியை எடுத்துக் கொடுத்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு மூத்த நடிகராக ரஜினிகாந்த் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை தலைமை தாங்கியுள்ளார். நயன்தாரா ரஜினியுடன் இணைந்த சந்திரமுகி, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானும் பங்கேற்றுள்ளார்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக முதல் முறையாக நயன்தாரா பாலிவுட்டில் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இவ்வாறு பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், தமிழ் சூப்பர் ஸ்டாரும் இவர்களது திருமணத்தில் பங்கேற்று உள்ளனர். மேலும் நயன், விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நயன்தாராவின் சக நடிகை மற்றும் தோழியான சமந்தாவால் இவர்களது திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. மேலும் நயன், விக்னேஷ் சிவன் திருமணத்தில் மற்ற பிரபலங்கள் யார் கலந்து கொண்டார்கள் என்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

Continue Reading
To Top