News | செய்திகள்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷ் நடிப்பில் தயாராகும் வட சென்னை படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஏனெனில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைவதாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.
இப்பட படப்பிடிப்பு எப்போது தொடர்ந்து நடக்கும் என்று தெரியவில்லை. அண்மையில் இப்படத்தில் இருந்து முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி சில காரணங்களால் விலகி இருந்தார். இந்த நிலையில் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
