Tamil Cinema News | சினிமா செய்திகள்
ராஜமௌலியை வம்பிழுத்து பின் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்!
ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான பாகுபலி 2 படம் ரூ 1500 கோடி வசூலை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பலரும் படத்திற்கு நேர்மறையான கருத்துக்களையே கூறிவருகின்றனர்.
இயக்குனர் ராஜமௌலி மற்றும் பிரபாஸ், அனுஷ்கா மற்றும் பலருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் பாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகர் கமால்.ஆர்.கான் படம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதில் அவர் பாகுபலி 1 படம் தன்னை தென்னிந்திய சினிமா படங்களை பார்க்க தூண்டியதாகவும், தற்போது வெளியாகியுள்ள பாகுபலி 2 படத்திற்கு பிறகு தென்னிந்திய படங்களை பார்க்கவே கூடாது என அவர் முடிவு செய்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார்.
அவர் எனக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால் பலருக்கும் இது பிடித்திருக்கிறது. தன் கருத்துக்காக மன்னிப்பு கேட்பதாகவும், ராஜமௌலி மன்னிக்க வேண்டும் என தற்போது கூறியுள்ளார்.
ஏற்கனவே இவர் மோகன்லாலை கிண்டல் செய்து பின் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
