Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க துடிக்கும் பிரபல முன்னணி நடிகர்.. அவுங்க அந்த மாதிரி டைரக்டர் இல்ல சார்!
சூரரை போற்று படத்திற்கு பிறகு இந்திய சினிமாவே போற்றும் இயக்குனராக மாறியுள்ளார் சுதா கொங்கரா.
பெண் இயக்குநராக இருந்து மிகப்பெரிய வெற்றிப் படத்தை கொடுத்து விட்டதால் தற்போது ஆளாளுக்கு சுதா படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர்.
தளபதி 65 படம் கூட சுதா கொங்கரா தான் முதலில் இயக்க இருந்தார். ஆனால் இடையில் முருகதாஸ் புகுந்து ஆட்டையை குளப்பியதால் அந்த வாய்ப்பு மிஸ்ஸானது.
அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவர்கொண்டா சுதா கொங்கரா படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படங்களில் பெரும்பாலும் ஹீரோயினுடன் மிக நெருக்கமான காட்சிகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் சுதா கொங்கரா படத்தில் அதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது என இப்போதே ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

vijay-devarkonda-cinemapettai
