ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

தளபதி 66 படத்தில் நான் நடிக்கவில்லை.. தேவையில்லாமல் வதந்தியை பரப்பாதீர்கள்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 66. இப்படம் முழுக்க முழுக்க குடும்ப சென்டிமென்ட் கதையாக இருப்பதால் இதில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடிக்கின்றனர். ஆரம்பத்தில் இப்படத்தில் சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

அதைத்தொடர்ந்து தற்போது பிரபு, சங்கீதா, ஷாம் போன்ற பிரபலங்களும் தளபதி 66 படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் நடிகர் மனோபாலா கலந்து கொண்டார். இதனால் இவரும் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் இணையத்தில் வெளியானது.

இதைத் தொடர்ந்து நடிகர் சரத்குமாருடன் மனோபாலா உட்கார்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. இதனால் தளபதி 66 படத்தின் ஷூட்டிங்கின்போது தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நிச்சயமாக மனோபாலா இந்த படத்தில் நடிக்கிறார் என உறுதிபட பலரும் கூறி வந்தனர்.

மேலும் எப்போதும் போல இப்படத்திலும் மனோபாலா நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளார் என்ற செய்தியும் இணையத்தில் பரவி இருந்தது. ஆனால் தற்போது மனோபாலா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தளபதி 66 படத்தில் நான் நடிக்கவில்லை என வெளிப்படையாக கூறியுள்ளார்.

அதனால் இந்த வதந்திக்கு மனோபாலா தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் தளபதி 66 படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற தமன் அங்கு நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் இப்படத்தின் இயக்குனர் வம்சி ஒவ்வொரு காட்சியும் செதுக்கியுள்ளார் என்ற பல விஷயங்களை தமன் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

Trending News