Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாகூடாது.! அஜித்தை தாறுமாறாக புகழ்ந்த பிரபல நடிகர்.!

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் திறமை மட்டும் போதாது அதை தாண்டி தன்னம்பிக்கை கண்டிப்பாக தேவை சினிமாவில் சாதித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் ஒருவர் தான் நடிகர் அஜித் இவரை ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களுக்கும் பிடிக்கும் இவரை இவருடன் நடிப்பதற்கு இவருடன் பேசுவதற்கு பலபேர் சுற்றுகிறார்கள்.

ஆனால் இவரை பொது இடங்களில் பார்க்க முடியாது, இவருடன் பணியாற்றுபவருக்கு, இவர் கூட இருப்பவர்களுக்கு எதாவது பிரச்சனை கஷ்டம் என்றால் உடனே சத்தமே இல்லாமல் முன் வந்து உதவி செய்வார்.

தற்பொழுது பிரபல நடிகர் மையம் கோபி அஜித்தை பற்றி புகாழ்ந்து பேசியுள்ளார் அஜித்தை பற்றி யாருக்கும் தெரியாத தகவலை தற்பொழுது கூறியுள்ளார், அவர் கூறியதாவது வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாகூடாது என கூறுவார்கள் அப்படிதான் அஜித்தும்.

மலேசியாவில் உள்ள மக்களுக்கு நடிகர் அஜித் பல நன்மைகளை செய்துள்ளார் அங்குள்ள மக்களே என்னிடம் கூறியுள்ளார் அதுமட்டும் இல்லாமல் சென்னையில் வெள்ளம் வந்தபொழுது மக்கள் தங்குவதற்கு வீடு, திருமணமண்டபம், முதியோர் இல்லம் என அனைத்தையும் கொடுத்தார் ஆனால் இது யாருக்கும் எந்த மக்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.

மேலும் மையம் கோபி இதுவரை அஜித்துடன் நடித்ததே இல்லை ஆனால் அவருக்கு அஜித்தை பிடிக்குமாம் விரைவில் அஜித்துடன் நடிப்பேன் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top