வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வரும் படம் என்றாலே ரசிகர்களிடம் அப்படத்திற்கு தனி வரவேற்பு இருக்கும்.அவர்கள் கூட்டணியில் வடசென்னை படம் தயாராகி வருகிறது.

இப்படத்தில் ஆன்ட்ரியா, அமலாபால், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி போன்ற பல கலைஞர்கள் நடிக்கின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, தான் இந்த படத்தில் நடிக்க கமிட்டாகவில்லை என்று கூறியுள்ளார்