தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அரவிந்த் சாமி இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பதற்கு முதற்கட்ட பணிகள் தொடங்கி இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. மம்முட்டி, ரஜினிகாந்த் என இரு மொழிகளின் சூப்பர்ஸ்டார் இடையில் கத்துக்குட்டியாக இருந்தாலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதை தொடர்ந்து, அவருக்கு கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமது வேடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகுந்த கவனம் கொண்டவர். இதுவரை வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர் நடிப்பில் வெளியான ரோஜா மற்றும் பாம்பே ஆகிய படங்கள் தேசிய விருதை பெற்றது. தமிழ் சினிமாவின் முதல் சாக்லேட் பாய் என்ற சிறப்பை பெற்றவர். கோலிவுட்டில் அழகு கண்ணனாக இருந்த அரவிந்த் சாமி, ஒரு கட்டத்தில் உடல் எடையை அதிகரித்து சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளாகினார்.

இதை தொடர்ந்து, தனது எடையை குறைத்து விட்டு கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார். தனி ஒருவன் படத்தில் வில்லனாக அவரின் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் கோலிவுட்டின் ஸ்டார் நாயகனாக அவருக்கு இடம் கிடைத்தது. இதையடுத்து, நடிகர் ஜெயம் ரவியின் போகன் படத்திலும் வில்லன் வேடமேற்றார். படத்தை அரவிந்த் சாமிக்காவே திரையரங்கு சென்று பார்த்தவர்கள் ஏராளம். இதனை தொடர்ந்து, தற்போது இவர் நடிப்பில் பாஸ்கர் தி ராஸ்கல், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.aravind swamy

இந்நிலையில், அரவிந்த் சாமி இயக்குனராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார். அதன் முதற்கட்ட பணிகளை தற்போது தொடங்கி இருக்கிறார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here