Tamil Cinema News | சினிமா செய்திகள்
எம்.ஜி.ஆர்-யை போலவே மதுஅருந்தும் படத்தில் நடிக்க மாட்டேன்! பிரபல நடிகர்!

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி படம் ‘பத்மாவதி’. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.
ரன்வீர் சிங் இந்த படத்தில் அலாவுதீன் கில்ஜி கதாபத்திரத்தில் நடித்து ரகிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறார்.
சமீமத்தில் ரன்வீர் சிங் கூறியது சினிமாவில் கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன் வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் அவரது ரசிகர்களும் அப்படியே இருந்தார்கள், சினிமாவில் நடிக்கும் பொழுது மது, புகை பிடிக்கும் கட்சிகளில் நடித்ததில்லை.
அந்த மாதிரியான கட்சிகளை அறவே சினிமாவில் நடிக்க மறுத்தார். தவறான காட்சிகளில் நடித்தால் அது ரசிகர்களை பாதிக்கும் என்றும், அவர்களும் தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடுவார்கள் என்றும் நம்பினார்.
அவர் நிஜவாழ்க்கையில் தீய பழக்கங்களை அறவே தவிர்த்தார் படங்களில் மக்களுக்கு நல்ல அறிவுரைகள் சொன்னார். வாழ்க்கையிலும் அதை கடைபிடித்தார். இதனால் தான் ரசிகர்கள் அவரை கொண்டாடினார்கள்.
ரன்வீர் சிங் எம்.ஜி.ஆரை போலவே நானும் மது அருந்தும் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறினார். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் தயாரிக்கப்போவதாகவும் அதில் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் சிலர் என்னை கேட்டனர். மது குடிப்பது போன்று காட்சிகள் இருந்தன ஆனால் அதை மறுத்து விட்டேன்.
