fbpx
Connect with us

Cinemapettai

அஜீத்தின் மெகா ஹிட் படத்தை, இதெல்லாம் ஒரு படமா என கேவலப்படுத்திய பிரபல நடிகர்.. கடுப்பில் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜீத்தின் மெகா ஹிட் படத்தை, இதெல்லாம் ஒரு படமா என கேவலப்படுத்திய பிரபல நடிகர்.. கடுப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். சமீபத்தில் இவருடைய படங்கள் மிகப்பெரிய வெற்றியை குவித்து வருவது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் அஜீத் படங்களை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பல நடிகர்கள் ஆர்வம் காட்டும் நிலையில் கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் அஜித் படத்தை கேவலப்படுத்திய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனம் இதே படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய ஆசைப்பட்டு கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரிடம் படத்தை காட்டியுள்ளனர்.

அதனை பார்த்த சிவராஜ்குமார், இதெல்லாம் ஒரு படமா என அசிங்கப்படுத்தி விட்டாராம். இது தல ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது.

இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் தெரிவித்தனர். சமீபகாலமாக வலைப்பேச்சு நண்பர்கள் சொல்லும் தகவல்கள் ரசிகர்களை கோபப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top