fbpx
Connect with us

Cinemapettai

சிங்கம் படத்தை தவற விட்டு தப்பு செய்த பிரபல நடிகர்.. சூர்யா சூப்பர் ஸ்டார் ஆனதை பார்த்து புலம்பல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிங்கம் படத்தை தவற விட்டு தப்பு செய்த பிரபல நடிகர்.. சூர்யா சூப்பர் ஸ்டார் ஆனதை பார்த்து புலம்பல்

சூர்யா, அனுஷ்கா நடிப்பில் ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிங்கம். சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்ட இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு வசூல் புரட்சியை செய்தது என்றே சொல்லலாம்.

அந்த அளவுக்கு தாறுமாறு வெற்றியை பெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா என அனைத்து பகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் சூர்யாவுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. நடிகர் சூர்யாவை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உச்சத்தில் உயர்த்திய திரைப்படம் என்றால் மிகையாகாது.

ஆனால் ஹரி, சூர்யாவுக்கு முன்னதாக சிங்கம் படத்தின் கதையை விக்ரமுக்கு தான் சொன்னாராம். அப்போது ஒரே மாதிரியான போலீஸ் பார்முலாவில் நடிக்க ஆர்வம் இல்லாத விக்ரம் அந்த படத்தை நிராகரித்தார்.

அதன் பிறகுதான் இந்த கதை சூர்யாவுக்கு செல்ல கதையின் சுவாரசியம் தெரிந்து உடனடியாக படத்தை தேர்வு செய்து தன்னுடைய மார்க்கெட்டையும் உலக அளவில் உயர்த்திக் கொண்டாராம் சூர்யா. பிறகு விக்ரம் பேசாமல் நம்மளே இந்த படத்தை பண்ணிருக்கலாம் என வருத்தப்பட்டாராம்.

விக்ரமின் படங்கள் வித்தியாசமாக இருந்தாலும் வசூல் ரீதியாக பின்னடைவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமின் கமர்சியல் படங்கள் வெற்றி பெற்று பல காலமாகிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் விக்ரம் சாமி என்ற படம் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top