வீரம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தவர் அப்புக்குட்டி. இவரை வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் அப்புக்குட்டிக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்துள்ளார்களாம். ஒருமுறை அப்புக்குட்டி தன் திருமணம் நடந்தால் நீங்கள் தான் நடத்தி வைக்க வேண்டும் என்று அஜித்திடம் கேட்டுக் கொண்டாராம்.

அதன்படி, அப்புக்குட்டி திருமணத்தை நடத்தி வைக்க அஜித்தும் ஓகே சொல்லி விட்டாராம்.

விரைவில் அஜித் தலைமையில் அப்புக்குட்டி திருமணம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.