தளபதி 66ல் கைகோர்க்கும் பலே நடிகர்.. அப்போ குடும்ப கதையோடு அதையும் கையிலெடுக்கும் விஜய்

தளபதி விஜயின் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருடைய 66-வது படமான தளபதியின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் முதலாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா ஜோடி சேருகிறார். அப்போது இந்த படத்தில் நடனத்திற்கு பஞ்சம் இருக்காது.

ஏற்கனவே ராஷ்மிகா, புஷ்பா படத்தில் ஆடிய ஒரு ஆட்டத்திற்கு மொத்த தமிழ்நாடே கிறங்கிப் போய்க் கிடக்கிறது. எனவே அவர் நிச்சயம் விஜய் 66ல் படத்திலும் நடனத்தில் மிக சிறப்பாக செயல்படுவார். இந்த படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் விதமாக பலே நடிகர் கைகோர்த்துள்ளார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் இந்தப் படம் குடும்ப கதை என்று கூறி வருகின்றனர்.

அதற்காக ஒரு பிரமாண்ட செட் ஹைதராபாத்தில் போடப்பட்டு வெகு சிறப்பாக இன்றிலிருந்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் விஜய்யுடன் கை கோர்க்கிறார் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு. யோகி பாபு, வைபோ இந்த படத்தில் சேர்ப்பதன் மூலம், இந்தப் படத்தில் விஜய் உடன் அவர்கள் காமெடியில் கலக்குவார் என்று தெரிகிறது.

இது குடும்பம் கலந்த காமெடி படமாக இருக்கும் என்று பேசி வருகின்றனர். எனவே தளபதியின் 66-வது படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார்.

அதிலும் குறிப்பாக இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இடம் பெறவில்லை என்று ஏற்கனவே ஒரு செய்தி உலாவிக் கொண்டிருக்கிறது. மேலும் குடும்ப கதைகளை கொண்ட இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும், தளபதிக்கு அண்ணனாக லேசா லேசா படத்தின் கதாநாயகன் சாம் நடிக்கப்போகிறார்.

இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமெண்ட் திரைப்படமாக உருவாக்கப் போகிற இந்தப்படத்தில் தளபதி விஜய் உடன் யோகிபாபு தன்னுடைய காமெடியின் மூலம் படத்திற்கு கூடுதல் வலு சேர்ப்பார் என படக்குழுவினர் நம்புகின்றனர். எனவே விஜய்-யோகிபாபு கம்போ எப்படி ஒர்க் அவுட்டாக போகிறது என்பதைப் பார்ப்பதற்காகவே இந்த படத்தை குறித்து ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Next Story

- Advertisement -