Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

விஸ்வாசம் படத்தில் இணைந்த பிரபல நடிகர்
அஜித் – சிவா கூட்டணியில் உருவாகி வரும் விஸ்வாசம் படத்துக்கு நாளுக்குநாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. படம் குறித்து வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் அந்த ஹைப்பை அதிகப்படுத்தும் வகையிலேயே இருக்கிறது.

Visuvasam
வீரம், வேதாளம் மற்றும் விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கப் போவதாகத் தகவல் வெளியான நாளில், அதற்குக் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் விவேகம் கொடுத்த பாடம், அஜித்துக்கு மேலும் ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என இயக்குநர் சிவா தீவிரமாக உழைத்து வருகிறார். அதன்பிறகு விஸ்வாசம் படம் குறித்து வெளியான தகவல்கள் ஒவ்வொன்றும் அடடே ரகம் என்றே கூறலாம். நாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடமல் தல கலக்கி வருவது. இரண்டு வேடங்களில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு விடை சொல்லி மீண்டும் இளமையான லுக்கில் அஜித் நடிப்பது என ஓவ்வொரு தகவலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதில், அஜித் தந்தை மற்றும் மகன் என இரண்டு ரோல்களில் அஜித் நடிக்கிறார். தந்தை அஜித்துக்கு நயன் ஜோடியாகவு, மகன் அஜித்துக்கு சாக்ஷி அகர்வால் ஜோடியாகவும் நடிப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் முதல் ஷெட்யூலை படக்குழு முடித்திருக்கிறது. இதில், அஜித் – நயன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள், யோகி பாபு, திலக் ரமேஷ், தம்பி ராமையா உள்ளிட்டோர் இடம்பெற்ற காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் சென்னையில் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில், இளமையான அஜித் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன.
இந்தநிலையில், விஸ்வாசம் படத்தில் நடிக்க சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் ஒப்பந்தமாகியிருக்கிறார். அஜித்துடன் காதல் மன்னன், வாலி தொடங்கி என்னை அறிந்தால் படம் வரை பல்வேறு படங்களில் நடித்துள்ள விவேக், விஸ்வாசம் படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள விவேக், அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன் என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
