சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்று படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

தன் வயதையும் பொருட்படுத்தாது சமூக பிரச்சனையில் ஒரு தீர்வை காண போராடுபவர் ட்ராபிக் ராமசாமி. எத்தனை துன்பம் எத்தனை வறுமை என வந்த போதிலும், சமூகத்திற்காக மட்டுமே என் அர்ப்பணிப்பு என இருப்பவர். அவருக்கு கோலிவுட்டின் சமர்ப்பணமாக அவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. ட்ராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே உருவாகும் இப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.

படத்தை அறிமுக இயக்குனர் விக்கி இயக்குகிறார். ரோகிணி, பிரகாஷ்ராஜ், ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ’ஹரஹரமகா தேவகி’ இசையமைப்பாளர் பாலமுரளி பாலு படத்தை இசையமைத்து இருக்கிறார். பாடல் உரிமையை டிரெண்ட் மியூசிக் நிறுவனம் வாங்கி இருக்கிறது.

பரபரப்பாக உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. இப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க எஸ்.ஏ.சியை வைத்து தளபதியிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. தந்தை நடிக்கும் படம் என்றாலும் தன் மீது எதும் பிம்பம் உருவாகிவிடுமோ என அதற்கு விஜய் மறுப்பு சொல்லிவிட்டதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து, இப்படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரனின் சிஷ்யன் விஜய் ஆண்டனி சிறப்பு வேடத்தில் நடித்து இருக்கிறார். அதேப்போல, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சம்பளம் எதுவும் எதிர்பார்க்காமல் இப்படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து கொடுத்திருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில், ட்ராபிக் ராமசாமி படத்தில் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய பிரபலமும் நடித்து இருக்கிறாராம். ஆனால், அவர் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமால் படக்குழு சஸ்பென்ஸாக வைத்து இருக்கிறது. யாராக இருக்கும் இப்போதே குழுப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது ஒரு க்ரூப்.