தற்போது ரஜினி, கமல், பார்த்திபன் என்று வரிசையாக ஒவ்வொரு நடிகரும் ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் வேளையில் சம்பந்தமே இல்லாமல் ஒரு ஹீரோ இந்த லிஸ்ட்ல சேர்ந்துருக்காருங்க.

அது வேற யாருமில்லை காலகேயனை வதம் செய்த நம்ம பல்வாழ்தேவன் ராணாதான். இப்போ அவர் நடிச்சு விரைவில் திரைக்கு வரப்போகிற டப்பிங் படம்தான் நான் ஆணையிட்டால்.

கொஞ்ச நாள் முன்ன இந்த படத்தோட டிரைலர் ரிலீஸ் ஆகியது, அதுல வந்த வசனங்கள் நம்ம தமிழக ஆளும் கட்சிய கிண்டல் அடிக்கிற மாதிரி இருந்தது.

டிரைலர்ல இருந்த சில சர்ச்சைக்குரிய விஷயங்கள்

> காதரின் தெரசா புகை பிடிப்பது போன்ற காட்சி
> சி.எம். சீட்டு என் சூ…க்கு கீழடா என்கிற வசனம்
> 100 M.L.Aக்களை தூக்கிட்டு போய் resortல வைச்சேனா நானும் ஆவேன்டா சி.எம்

சரி இப்போ இந்த பிரச்சனைகள் குறித்து ராணா என்ன சொல்லிருக்காருன்னா

“நான் இந்த படத்தில் எந்த ஒரு கட்சியையோ தனி நபரையோ பற்றி பேசலை, இது ஒரு பொது அரசியல் சம்பந்தப்பட்ட படம். எனக்கு இதுல வசனம் பேசினதை தவிர வேற எந்த சொந்த கருத்தும் இல்லை.

டிரைலர் வந்த பிறகு சில பேரு அதுல வந்த வசனம் குறித்து பயங்கரமா திட்டுறாங்க சில பேரு அரசியலுக்கு வர விருப்பம் இருக்கானு கூப்பிடுறாங்க. எனக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. இந்த படத்தை படமா மட்டும் பாருங்க என்னை நடிகனா மட்டும் பாருங்க. நான் எந்த அரசியல் சார்பும் கொண்டவன் இல்லை.

படம் நல்லா வந்துருக்கு, காஜல் எனக்கு மனைவியா ரொம்ப பொருத்தமா நடிச்சுருக்காங்க. படத்துல நான் கந்துவட்டி கொடுக்கிற கதாபாத்திரம் பண்ணிருக்கேன். படம் காரைக்குடிலதான் 60% ஷூட்டிங் எடுத்தோம். தமிழையும் தெலுங்குலையும் இந்த படம் எல்லா ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்னு நம்புறேன்.”

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எதிர்த்து பேசுன டி.ஜி.பி யையே தூக்கி அடிச்சுட்டு இருக்காங்களே நம்ம பல்லாவை சும்மா விடுவாங்கன்னு நினைக்குறிங்க?