Arjun-Reddy

தெலுங்கு சினிமாவில் தேவதாஸ் எனக் கொண்டாடப்பட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிமுக நடிகர்களான விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தெலுங்கு படம் அர்ஜூன் ரெட்டி. கல்ட் கிளாசிக் வகை படமாக வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தை தெலுங்கு சினிமா காதலர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மெடிக்கால் காலேஜ் ஸ்டூடண்டாகவும், காதல் தோல்வியால் துவண்ட போதும் சரி, அர்ஜூன் ரெட்டியாகவே திரையில் வாழ்ந்திருந்தார் விஜய் தேவரகொண்டா.. அதிலும் குறிப்பாக ஷாலினி பாண்டேவுக்கு சாபம் விடும் காட்சியிலும், காதல் தோல்விக்குப் பின்னர், அவர் செய்யும் சேட்டைகள் பட்டிதொட்டியெங்கும் அவரைப் பிரபலமாக்கியது. இதனால், மொழி எல்லைகள் தாண்டியும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் கூடினர்.

இதையடுத்து, படத்தின் தமிழ் மற்றும் ஹிந்தி ரீ-மேக்குகள் பெரிய தொகைக்கு விலை பேசப்பட்டன. தமிழில் இயக்குநர் பாலா கைவண்ணத்தில் வர்மா என்ற பெயரில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ், நடிகராக அறிமுகமாகிறார். அர்ஜூன் ரெட்டி தந்த புகழால், விஜய் தேவரகொண்டா நேரடித் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். நோட்டா என்ற தலைப்பில் அரசியல் குறித்து உருவாகி வரும் நேரடி தமிழ் படத்தில் அவர் ஹீரோவாகியுள்ளார். அதேநேரம் ஷாலினி பாண்டே, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 100 பெர்சன்ட் காதல் உள்ளிட்ட படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அர்ஜூன் ரெட்டி படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையையும் இயக்குநர் சந்தீப் ரெட்டி தயார் செய்து விட்டதாகத் தெரிகிறது.

அதிகம் படித்தவை:  சகோதரி ஜோ, தம்பி ஜி வி - நாச்சியார் படக்குழுவை பாராட்டிய வைரமுத்து !

இந்தநிலையில், அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக் மூலம் விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல் தற்போது மறுக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாகித் கபூர் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அஸ்வின் வர்தே மற்றும் முராத் கேதானி ஆகியோர் ஹிந்தி அர்ஜூன் ரெட்டி படத்தைத் தயாரிக்க இருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  சச்சினுக்கு இசையமைப்பது பற்றி மனம் திறந்த ஏ.ஆர்.ரகுமான்

படத்தில் நடிக்க ஷாகித் கபூர் கடந்த வாரமே பச்சைக் கொடி காட்டிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இதனால், திரைக்கதை அமைக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன. விரைவில் இயக்குநர் முடிவு செய்யப்பட்டு, படப்பிடிப்பை வரும் ஜூலை மாதத்தில் தொடங்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம். அதேபோல், ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் முன்னணி நடிகையை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.