வெயிலை சமாளிக்க பொது மக்களுக்கு ஹைதராபாத் முழுவதும் ஐஸ்க்ரீம் ட்ரீட் கொடுத்து இருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

Vijay Devarkonda

அர்ஜுன் ரெட்டியில் முரட்டு ஆளாக அனைவரையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. முதல் படம் என சொல்ல முடியாத அளவுக்கு ஸ்டைலிஷாக தன் பங்கை செய்து முடித்து இருந்தார். தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் அவருக்கு ரசிகைகள் அதிகமாகினர்.

தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகும் நோட்டா படத்தில் நடித்து வருகிறார். அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் நடிகையர் திலகம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து, சினிமா உலகின் ஹாட் ஹிட் நாயகனாக வலம் வருகிறார்.

விஜய் தேவரகொண்டா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் தன் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் வைக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சில நாட்கள் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.

அதிகம் படித்தவை:  மனம் நொந்து வேதனையில் பேசும் வையாபுரி.!!

அதற்கே நான் பல கஷ்டம் பட்டேன். அப்போது தான் எனக்கு இந்த ஐடியா எனக்கு தோன்றியது. இன்று ஒருநாள் முழுவது ஹைதராபாத்தை சுற்றி 3 ஐஸ்க்ரீம் ட்ரக்குகள் வலம் வருகிறது. போலீசார், கடை உரிமையாளர்கள், மாணவர்கள், ஊழியர்கள் எல்லாருக்கும் இலவச ஐஸ்க்ரீம்கள் கொடுக்க இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

அதிகம் படித்தவை:  சர்ச்சைக்குரிய "லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா” திரைப்படத்திற்கு ’ஏ ’ சான்றிதழ்..!
vijay-devarakonda

தொடர்ந்து, தி தேவரகொண்டா பர்த்டே ட்ரக்கிற்கு ஹாய் சொல்லுங்கள். முடிந்த வரை ஐதராபாத்தை இந்த ட்ரக்குகள் சுற்று வரும். உங்கள் பகுதியில் இந்த வண்டியை பார்த்தால் கூச்சப்படாமல் சென்று ஐஸ்க்ரீமை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அட இவரல்லவோ ஹீரோ!