Connect with us

Cinemapettai

பிக்பாஸ் முதல் சீசனில் வெளியேறி இந்த சீசனில் உள்ளே வரும் பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த பிக் பாஸ்-4

kamal-big-boss-season-4

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் முதல் சீசனில் வெளியேறி இந்த சீசனில் உள்ளே வரும் பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த பிக் பாஸ்-4

தமிழ் பிக் பாஸின் கடந்த 3 சீசன்களையும் மக்கள் அதிக ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். எனவே சினிமாவை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அதனால் தான் விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது. 3 சீசன்களையும்மே உலகநாயகன் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குவதே இந்நிகழ்ச்சியின் தனி சிறப்பாக உள்ளது. அதேபோல் 4-வது சீசனையும் இவர்தான் தொகுத்து வழங்கப்போகிறார்.

பிக் பாஸ் சீசன் 1ல் ஆரவ், ஓவியா, கணேஷ், சினேகன், காயத்ரி, ஆர்த்தி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, வையாபுரி,நமீதா போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர்.

சீசன்-1 நிகழ்ச்சி தொடங்கிய நான்காவது நாளே போட்டியை விட்டு வெளியேறினார், வழக்கு எண் 18/9 படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீ.

இவருடைய உடல்நிலை குறைவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஸ்ரீ நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அதன்பின் 2-வது மற்றும் 3-வது சீசன்களில் மீண்டும் பங்கேற்பார் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் பங்கேற்கவில்லை.

தற்போது நான்காவது சீசனில் அவர் களமிறங்குவார் என்ற தகவல்கள் கசிக்கின்றது. இதனால் ரசிகர்களின் மத்தியில் ஸ்ரீ பிக்பாஸில் கலந்து கொள்ளப்போகிறார் என்ற ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top