Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவாகாரத்து செய்த மனைவிக்கு கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் கொடுத்த நட்சத்திரங்கள் யார் தெரியுமா?

ஒரே மனைவியை கொண்டிருக்கும் நடிகர்கள் எண்ணிக்கை மிக சொற்பமாக மாறிவிட்டது. பல நடிகர்கள் தங்கள் மனைவியுடன் செட்டாகவில்லை என்றால் உடனே விவகாரத்து என முடிவு செய்து நீதிமன்ற படியேறி விடுவார்கள். அவ்வளவு தான் பலருக்கு அந்த வார தீனியாக இவர்கள் கதை மாறிவிடும் என்பது ஒரு புறம் என்றால், மனைவிகள் கேட்கும் ஜீவனாம்சம் தான் தலை சுற்ற வைக்கும்.
அப்படி விவகாரத்துக்காவே கோடிக்கணக்கில் செலவு செய்து டாப் நட்சத்திரங்கள் உங்கள் பார்வைக்கு!
இந்தியாவின் டான்ஸிங் கிங் பிரபுதேவா. நடிகை நயன்தாரா மீது கொண்ட காதலில் தன் மனைவியை பிரிய நீதிமன்றத்தை நாடினார். அதற்காக தனது முதல் மனைவிக்கு பத்து இலட்சம் ரொக்கமும், 20 -25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை எழுதிக் கொடுத்தார் என்றும் அறியப்படுகிறது.
முன்னணி டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி, மன கசப்பால் பிரிந்தனர். விவகாரத்து கேட்ட லியாண்டரிடம், மகளின் படிப்பு செலவுக்கு மாதம் ரூ 90 ஆயிரம் உட்பட நான்கு லட்ச ரூபாயை மாத ஜீவனாம்சமாக வாங்குகிறார். ரியா சஞ்சய் தத்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லியாண்டர் பயஸுடனான காதலால் சஞ்சய் தத்தை விவகாரத்து செய்தவர் ரியா. அப்போது, சஞ்சயிடம் 8 கோடி ரூபாயும், பல கோடி மதிப்பிலான ஆடம்பர காரையும் ஜீவனாம்சமாக பெற்றார்.
பாலிவுட்டின் ஸ்டார் ஐகான் சயிப் அலிகான். தன் முதல் மனைவி அம்ரிதாவுடனான 13 ஆண்டுகால திருமண வாழ்வை முறித்து கொள்ள முடிவு செய்தார். அம்ரிதா ஜீவனாம்சமாக 5 கோடி ரூபாய் கோரி இருந்தார். ஆனால், தான் ஷாருக்கான் போன்று பெரிய நடிகர் இல்லை என்றும், பகுதி பகுதியாக கொடுப்பேன் என்றும் உறுதி அளித்திருந்தார். அதன்படி, முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் கொடுத்தார். தனது மகனுக்கு 18 வயது ஆகும் வரை மாதம் ரூ 1 லட்சம் கொடுப்பேன் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் ஹாட் சென்ஷேசன் ஹ்ரித்திக் ரோஷன். இவர் மனைவி சூசன். இருவரும் பல வருடமாக திருமண பந்தத்தில் இருந்தனர். கங்கணா ரனவத், ஹ்ரித்திக்குடனான நட்பால் தம்பதிகள் விவகாரத்து வேண்டும் என நீதிமன்ற படியேறினர். சூசன் ஜீவனாம்சமாக ரூ.400 கோடிகள் கேட்டு, பிறகு இறுதியாக 380 கோடி ரூபாய் பெற்றார் என்று அறியப்படுகிறது.
