Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலுடன் நடித்த பிரபல நடிகர் திடீர் மரணம் – கமல் இரங்கல்!
ஹிந்தியில் பல படங்களில் நடித்து புகழ்பெற்ற பழம்பெரும் நடிகர் ஓம் புரி இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் தனது படுக்கையில் இறந்து கிடந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இவர் கமல் ஹாசனின் ஹே ராம் படத்தில் அவருடன் நடித்துள்ளார். மேலும் அரோகன், அர்த் சத்யா படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை இவர் தொடர்ந்து இரு முறை வாங்கியுள்ளார். இந்திய அளவில் கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களும் பிரதமர் மோடியும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
So long Omji. Prided myself on being his friend peer & admirer. Who dare say my Om Puri is no more ? He lives through his work.
— Kamal Haasan (@ikamalhaasan) January 6, 2017
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
