தமிழ் சினிமாவில் தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கட்டிப் போட்டவர் தான் அந்த நடிகர். பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு ஏராளமான திறமைகள் இருக்கிறது.
அந்த வகையில் இவருடைய நடிப்பை பார்த்து மிரளாதே ரசிகர்களே இருக்க முடியாது. தற்போது நடிப்பு மட்டுமல்லாமல் பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி வரும் அந்த நடிகர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அந்த படத்தை காண்பதற்காக ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பட சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் படத்தில் நடித்த பிரபலங்கள் மட்டும் அல்லாமல் நடிக்காத பிரபலங்கள் கூட ஆவலுடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பிறகும் தற்போது வரை அந்த விழா பற்றிய பேச்சை தான் எங்கு திரும்பினாலும் கேட்க முடிகிறது. தற்போது அதைவிட ஒரு சுவாரசியமான சம்பவமும் நடந்துள்ளது. என்னவென்றால் சம்பந்தப்பட்ட நடிகர் விழா முடிந்தவுடன் வந்திருந்த பிரபலங்கள் அனைவருக்கும் தனியாக நைட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதில் நடிகருடன் முந்தைய திரைப்படங்களில் வரிசையாக ஜோடி போட்டு நடித்த அந்த இளம் நடிகையும் கலந்து கொண்டுள்ளார். நடிகைக்கும், நடிகருக்கும் ஏதோ இருக்கிறது என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இருவரும் அந்தப் பார்ட்டியை படு நெருக்கமாக கொண்டாடி இருக்கின்றனர்.
இந்த வயதிலும் நடிகர் அந்த விஷயத்தில் கில்லாடியா தான் இருக்கிறார் என்று பார்ட்டிக்கு வந்த இளசுகள் முதற்கொண்டு பலரும் வாயடைத்துப் போய் இருக்கின்றனர். தற்போது அந்த நைட் பார்ட்டியை பற்றிதான் கோடம்பாக்கத்தில் பலரும் சத்தமில்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.