Tamil Cinema News | சினிமா செய்திகள்
சுசீந்திரன் படத்திற்கு இசையமைக்கும் பிரபல நடிகர்.. நமக்கு நடிப்பே வராது, இது எதுக்கு? எனக் கிண்டல்
Published on
ஊரடங்கை காரணம் காட்டி பல நடிகர் நடிகைகள் படப்பிடிப்புகளுக்கு வராமல் இருந்த சமயத்தில் சுசீந்திரன் மற்றும் கிட்டத்தட்ட மூன்று படங்களை முடித்து விட்டாராம்.
சுசீந்திரன் மூன்று படங்களை இயக்கினாலும் முன்னுரிமை தருவது எண்ணமும் சிம்பு மற்றும் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஈஸ்வரன் படத்துக்குத்தான்.
இதுபோக ஏற்கனவே நடிகர் ஜெய்யை வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளாராம்.
மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளராக நடிகர் ஜெய் முதல்முறையாக களமிறங்க உள்ளாராம்.
நடிகர் ஜெய் தேனிசைத் தென்றல் தேவாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் சில ரசிகர்கள் ஜெய்க்கு நடிப்பே வராது, மியூசிக் எதுக்கு என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

Jai-MagalirMattum
