Connect with us
boomerang-movie

தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் பிரபல நடிகர்..! கலக்கத்தில் முக்கிய கட்சிகள்!

Politics | அரசியல்

தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கும் பிரபல நடிகர்..! கலக்கத்தில் முக்கிய கட்சிகள்!

சுயேச்சையாக களமிறங்கும் பிரகாஷ்ராஜ்..!

ஹாய் செல்லம் இந்த வசனத்தை கேட்கும்போதே நம் கண்களுக்கு முன் வந்து நிற்பவர் திரு.பிரகாஷ் ராஜ் அவர்கள் இவர் தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தன்னை ஒரு சிறந்த நடிகராய் நிரூபித்துள்ளார். இவர் கடைசியாக நடந்த தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார்.

மேலும் அத்தேர்தலில் துணைத்தலைவர் இடத்திற்கு போட்டியிட்டு வென்றார் விஷாலுடன் ஏற்பட்ட சில மனக்கசப்புகளும் அரசியலில் இவரது ஈடுபாட்டினாலும் இவர் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இவர் ஒரு இந்துத்துவா மற்றும் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவற்றுக்கு மிகவும் எதிரானவர்.

இவர் அதிக மேடைகளில் பி.ஜே.பியின் முகத்தை கிழிக்க பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறார் அதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காமல் சுயேச்சையாக களமிறங்கப் போவதாக புத்தாண்டு தினத்தன்று தன் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

Party name is KBP (Kuch Bhi Party)

மேலும் நெருங்கி அரசியல் வட்டாரங்களில் இவர் கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என அரசல்புரசலாக பேச்சுக்கள் எழுகின்றன. இதனுடைய தெளிவான விளக்கம் இன்னும் ஒரு சில வாரங்களில் அவரிடமிருந்து அதிகாரபூர்வமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நாம் நம் செல்லத்தை தமிழ் சினிமாவில் அதிகம் பார்க்க முடியாது என்பது சற்றே வேதனையை கொடுக்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top