தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவது தீபாவளி விருந்தாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

மெர்சலில் இடம் பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என மெர்சல் படக்குழுவினருக்கு பிரபல தேசிய கட்சி மிரட்டல் விடுத்து வந்தது.

mersal-box

முதலில் அந்த காட்சிகளை நீக்குவதாக ஒப்பு கொண்ட படக்குழுவினர் பின்னர் ரசிகர்கள் வேண்டாம் என கூறியதால் எந்த காட்சியையும் நீக்க முடியாது என கூறி விட்டது.

விஜய் மற்றும் படக்குழுவினருடன் மெர்சல் திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். படம் குறித்து விஜய்யிடம் அவர் என்ன தெரவித்தார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

விஜய் மற்றும் படக்குழுவினருடன் மெர்சல் திரைப்படத்தை இன்று பார்த்துள்ளார் கமல்ஹாசன். படம் குறித்து விஜய்யிடம் அவர் என்ன தெரவித்தார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

ஏனென்றில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கமல்ஹாசனிடம், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்குப் போட்டியாக இருப்பாரா? என்று கேட்கப்பட்டது. இடையூறாக இருக்கும் பட்சத்தில் அதற்கான விமர்சனங்கள் வைக்கப்படும்” என்றார்.

அடுத்ததாக, “வெற்றி பெற்ற பெரிய நடிகர்கள் ஒரு நல்ல படத்தில் நடிக்க வேண்டும். இந்தி நடிகர் அமீர்கான் அப்படி நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரைப் போலவே தம்பி விஜய்யும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.., என்றும் கிண்டலாக கூறினார்.

இதுவரை விஜய், நல்ல திரைப்படத்தில் நடிக்கவில்லை என்கிற அர்த்தத்தில் கமல் கூறியதாக பேசப்பட்டது இந்த நிலையில்தான் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து குறிப்பிட்ட காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிறகு, காட்சிகள் நீக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.

mersal vijay
mersal vijay

ஆனாலும் படத்துக்கு விடப்பட்ட மிரட்டல்கள் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் உட்பட அகில இநந்திய அரசியல் தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவிக்கும் அளவுக்கு விவகாரம் பெரிதானது.

இதற்கிடையே, “ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கு மீண்டும் தணிக்கை தேவையில்லை” என்று கமல் தெரிவித்தார்.
இந்த நிலையில் விஜய்யுடன் சேர்ந்து மெர்சல் திரைப்படத்தை இன்று பார்த்தார் கமல்.

mersal magic
mersal magic

முன்னதாக, “நல்ல படங்களில் விஜய் நடிக்க வேண்டும்” என்று பகிரங்கமாக கூறிய கமல், மெர்சல் குறித்து எப்படிப்பட்ட விமர்சனத்தை விஜய் முன், வைத்தார் என்பதுதான் இப்போது கோலிவுட் டாக் ஆக இருக்கிறது.

இந்த பிரச்சனையில் மெர்சல் படக்குழுவினருக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகரான கமல்ஹாசன் விஜய் மற்றும் மெர்சல் படக்குழுவினருடன் பிரபல தியேட்டர் ஒன்றில் மெர்சல் படத்தை பார்த்து மெர்சலாகி உள்ளார்.