ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சத்யராஜ் கட்டப்பா கேரக்டரில் நடித்தார். பாகுபலி படத்தில் சிவகாமி கேரக்டருக்கு அடுத்தப்படியாக கட்டப்பா கதாபாத்திரமும் ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரபல பாலிவுட் வில்லன் குல்சன் குரோவர் பாகுபலி கட்டப்பா கேரக்டர் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறினார்.

அதில் சத்யராஜ் நடிப்பை விமர்சிக்கும் வகையில் குல்சன் கூறிய கருத்து இதுதான்:- பாகுபலி படத்தில் நடிகர் சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருந்தால் நான் அவரை விட நன்றாக நடித்து இருப்பேன்.

அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான தகுதிகளும் என்னிடம் மட்டும் தான் உள்ளது. சத்யராஜ் ஒரளவுக்கு தான் அவரது பணியை செய்துள்ளார். தனது கருத்தை முன்னதாகவே  இயக்குனர் ராஜமௌலியிடம் தெரிவித்து விட்டதாக கூறியுள்ளார்.

குல்சன் கருத்து சத்யராஜ் நடிப்பை விமர்சிக்கும் வகையில் உள்ளதால் பாலிவுட் முதல், கோலிவுட் வரை இவரது கருத்து பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.